9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலை போயுள்ளார். மற்ற 15 பேரையும் சீந்தக் கூட ஆள் இல்லை.
திசரா பெரைரா மட்டுமே ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மற்ற பிரபலங்கள் உள்ளிட்ட யாரையும் எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இது பெருத்த அவமானம் என்பதில் சந்தேகம் இல்லை. மஹளா ஜெயவர்த்தனாவைக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9வது ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்று பெங்களூரில் நடந்தது. அதில் பல முன்ணி வீரர்களை யாரும் ஏலம் எடுக்காத அவல நிலை ஏற்பட்டது.
இந்த ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த 16 வீரர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.
திசரா பெரைரா, மஹளா ஜெயவர்த்தனே, லஹிரு திரிமன்னே, நுவன் குலசேகரா, அஜந்தா மெண்டிஸ், சசித்ரா சேனநாயகே, துஷ்மந்தா சமீரா, டிஎம். தில்ஷன், ஜீவன் மெண்டிஸ், தில்ருவன் பெரரா, ஷேஹன் ஜெயசூர்யா, தாசன் சனகா, மிலிந்தா சிரவர்தனா, இசுரு உதனா, தில்ஷன் முனவீரா, சீகுகே பிரசன்னா ஆகியோரே அவர்கள்.
இதில் திசராவை மட்டும் டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் ஏடுத்தது.
மற்ற 15 வீரர்களையும் யாரும் எடுக்க முன்வரவில்லை. இதனால் இந்த 15 பேரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.