ஒரே இரவில் உக்ரைனுக்குள் தொகையாக நுழைந்த விமானங்கள்:முற்றாக தாக்கி அழிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமன்றி புத்தாண்டு தினத்தன்று அண்டை நாடான உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா 20 ஏவுகணைகளையும் வீசியதாகவும் உக்ரைன் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் மொத்தம் 45 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உக்ரைன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆளில்லா விமானங்கள், ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் -136 காமிகேஸ் ட்ரோன்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட அனைத்து ஆளில்லா விமானங்களையும் உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினர், எதிர்த்தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts