ஒரேமாதிரியான வேடங்களில் ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன்!

ஏழாம் அறிவு படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்தில் அவருடன் மீண்டும் இணைந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் இருவருமே நாயகிகளாக நடிக்கின்றனர். கதைப்படி இந்த படத்தில் அனுஷ்கா சூர்யாவின் மனைவியாகி விடுவதால் அவருக்கு நடிப்பதற்கான ஸ்கோப் அதிகமாக இல்லையாம். ஆனால் ஸ்ருதிஹாசன், படம் முழுக்க சூர்யாவுடன் பயணிக்கும் வேடத்தில் நடித்துள்ளாராம். அந்த வகையில், உளவுத்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் அவருக்கு உதவி செயயும் இன்னொரு அதிகாரியாக நடித்துள்ளார்.

shuruthy-aksharaa

அதேபோல், அஜித் நடித்து வரும் 57வது படத்தில் சர்வதேச குற்றவாளிகளை புலனாய்வு செய்யும் அதிகாரியாக அஜித் நடிக்கிறார். இந்த படத்திலும் அஜித்தின் மனைவியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். ஆனால் ஸ்ருதிஹாசனின் தங்கையான அக்சராஹாசன், அஜித்துக்கு உதவி செய்யும் அதிகாரியாக நடித்துள்ளார். அந்த வகையில், சூர்யாவுக்கு உதவி செய்யும் அதிகாரியாக ஸ்ருதிஹாசன் நடிப்பது போல், அஜித்துக்கு உதவி செய்யும் அதிகாரியாக அக்சரா ஹாசனும் நடித்து வருகிறார். ஆக, அக்காள், தங்கை இருவருமே கிட்டத்தட்ட ஒரேமாதிரியான வேடத்தில்தான் நடிப்பதாக தெரிகிறது.

Related Posts