ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி செயற்திட்டம் : சுயேட்சை வேட்பாளர்

balasubramaniyamஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்ற அடிப்படையில் கல்வி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பூட்டு சின்ன சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் அருளம்பலம் பாலகிருஸ்ணன் இன்று தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் 12.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

‘இவ்வாறு ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி என்ற அடிப்படையில் கல்வியினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் வடமாகாணத்தில் மட்டுமன்றி யாழ். மாவட்டத்திலும் 90 வீதமானவர்களை கல்வியில் உயர்த்த முடியும்.

இவ்வாறு பட்டதாரிகளை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், கல்வியில் அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும். அதேவேளை, இணக்கப்பாட்டு அரசியலின் மூலம் பிரதேச அபிவிருத்தியினை முன்னெடுக்க முடியும்’ என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts