கோதுமை மாவுக்கான விலை குறைப்பு

பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கான விலையை ஏழு ரூபாவால் குறைக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மேலும், நுகர்வோருக்கு ஒரு வார காலத்துக்கு அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை எதிர்வரும் 20ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுகர்வோருக்கு பாண் விலையை குறைத்து விற்பனை செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts