ஒரு வாரத்தில் வீடு திரும்புகிறார் கமல்

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்புகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்துவரும் இவர், கடந்த 14-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு திரைப்பட வேலைகளை முடித்து விட்டு மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார்.

அப்போது திடீரென்று தவறி விழுந்தார். இதில், காலில் சதை கிழிந்து ரத்தம் கொட்டியது.

வலது காலின் மூட்டுக்கு கீழே எலும்புமுறிவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

10 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இருப்பார் என்றும் தொடர்ந்து சில நாள்களுக்கு ஓய்வு எடுப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

Related Posts