ஒரு வயது மகளை கல்லால் அடித்துக்கொன்ற தந்தை

ஒரு வயதும் ஒரு மாதமுமேயான மகளை கல்லால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டிச் அக்குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்லால் அடித்ததில் காயமடைந்த குழந்தை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையின் தந்தையும் தாயும் பிரிந்து வாழ்கின்ற நிலையில், தந்தையிடம் குழந்தையைக் காண்பிப்பதற்காக இன்று அழைத்துச் சென்றபோதே, கல்லால் அடித்து குழந்தையை அவர் கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts