ஒரு போதும் மறக்கக் கூடாத உலகப் புகழ்பெற்ற நடிகை: கூகுள் டூடுல் வீடியோ

கம்ப்யூட்டர், டேப்லட், ஆன்ட்ராய்ட் போன் என்று எதுவாக இருந்தாலும் சரி. உங்களால் இப்போது இந்த செய்தியைப் படிக்க முடிவதற்குக் காரணம் ஒரு நடிகை என்றால் உங்களால் நம்ப முடியுமா? கொஞ்சம் கஷ்டப்பட்டாவது நம்பி விடுங்கள். ஏனென்றால் அதுதான் உண்மை…

beautiful

நாம் இப்போது பயன்படுத்தும் ப்ளூ டூத், வை-பை மற்றும் ஜிபிஎஸ் ஆகிய தொழில்நுட்பத்திற்கெல்லாம் அடி நாதம் உலகின் அழகிய பெண் என்று வர்ணிக்கப்பட்ட ஹெட்டி லாமர் (Hedy Lamarr) தான். அவரின் frequency-hopping என்கிற கண்டுபிடிப்பு தான் தற்போதைய spread-spectrum communication technology-யின் தொடக்கம். இந்த டெக்னாலஜியால்தான் தற்போது உலகமே உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது.

1913-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர், 1930-களில் ஐரோப்பிய சினிமாவில் அறிமுகமாகி, பின்பு ஹாலிவுட்டிலும் பிரபலமானார். மிகவும் கவர்ச்சியாய் நடித்து எதிர்ப்பும் அதே சமயம் வரவேற்பும் பெற்ற இவர், “woman of the Science” என்றும் கொண்டாடப்பட்டார்.

இன்று இவரது 101-வது பிறந்த நாள். அதை கூகுள் அற்புதமான வீடியோவுடன் அதன் டூடுல் பக்கத்தில் கொண்டாடி வருகிறது. இதோ அந்த வீடியோ:

Related Posts