ஒரு பொதுக் கூட்டத்தில் பேச 2 லட்சம் டாலர் வாங்கும் ஹிலாரி கிளின்டன்

அடுத்த ஜனாதிபதி கனவில் இருக்கும் ஹிலாரி கிளின்டன் (Hillary Rodham Clinton) தன் வாழ்க்கைச் சரிதத்தை நூலாக எழுதினார். அந்த நூலை விளம்பரம் செய்ய ஏபிசி தொலைக்காட்சிக்கு ஒரு நேர்காணலுக்கும் ஒத்துக்கொண்டார். அவரைப் பேட்டி கண்ட டயான் ஸ்வாயர் (Diane Sawyer) “பொருளாதார ஏற்றத் தாழ்வைப் பற்றி அடிக்கடி பேசும் நீங்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச 2 லட்சம் டாலர் வாங்குவது எப்படி சரியாகும்?” என வினவினார்

Hillary Rodham Clinton

“நான் பணக் கஷ்டத்தில் இருப்பதால் அப்படி வாங்குவது சரிதான்” எனச் சொல்லி அனைவரின் நகைப்புக்கும் ஆளாகியுள்ளார் ஹிலாரி. சுமார் 25 மில்லியன் டாலர் சொத்துகள், ஏராளமான மாளிகை மாதிரி வீடுகள் அவருக்கு இருந்தும், அவர் தான் பணக் கஷ்டத்தில் இருப்பதாகக் கூறியிருப்பது ஏழைகள் படும் உண்மையான பணக் கஷ்டம் என்றால் அவருக்கு என்னவென்று தெரியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

இதற்கிடையே நெவாடா பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஹிலாரிக்குப் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்து, அதற்கு 2.5 லட்சம் டாலர் கட்டணம் அளிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து “இது மாதிரி செலவுகள் கல்லூரி கல்விக் கட்டணத்தை அதிகப்படுத்திவிடும். அரசியல்வாதிகளுக்கு எதற்கு இத்தனை பெரிய தொகை?” எனப் போராடி வருவதும் ஹிலாரிக்குச் சிக்கலை அகிகப்படுத்தி உள்ளது.

Related Posts