“ஒரு பலமான சமூகத்தினால் மாத்திரமே ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்” என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது 2017ம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் பட்ஜட் உரையில் உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது
எமதுமக்களை ஒரு பலமான சமூகமாக வாழச் செய்ய வேண்டுமாக இருந்தால்அபிவிருத்தி சார்ந்த விடயத்தில் நாம் பின்வரும் நிலைபெறு அபிவிருத்திக் கொள்கைகளை கடைப்பிடிப்பது சிறப்பானதாக இருக்கும்
1.“எமது மக்களின் உழைப்பே எமது பலம்”இதுவே எமக்கான அபிவிருத்தியின் அடிப்படைக் கோட்பாடாக இருத்தல் அவசியமாகும்.
2. இன நலன்களும், அரசியல் நலன்களும் அபிவிருத்தியோடு இணைத்து நோக்கப்படலாகாது.
3. எல்லா விதமான அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளும், அவை மத்திய அரசினதாயினும் மாகாண அரசினதாயினும் வெளிப்படைத் தன்மையோடுஇ எமது மக்களின் கருத்தறிந்து, அவர்களுடைய பங்குபற்றுதலோடு
முன்னெடுக்கப்பட வேண்டும்.
4. அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் எமது மக்கள் நலன் சார்ந்ததாகவும் எமது பிரதேசத்திற்கு ஏற்புடையதாகவும் இருப்பது உறுதிசெய்யப்படுதல் வேண்டும்.
5. எமது உரிமைப் போராட்டத்திற்கும் எமது மக்களின் அபிவிருத்திக்கும் இடையிலான இடைத்தொடர்பு தெளிவாக வரையறுத்து முன்வைக்கப்பட வேண்டும்.
5. வடக்கு மாகாண மக்களின் அபிவிருத்திக்கும், அரசியல் கட்சிகளுக்குமிடையிலான தொடர்பும், இன ரீதியான அபிவிருத்தி என்ற கோட்பாடும்முற்றாக கைவிடப்படல் வேண்டும்.
6. எமது மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு என்ற பாரிய தொகுதியினுள் நேரடியாக போரில் பாதிக்கப்பட்டவர்கள், போரால் மறைமுகமாகப்பாதிக்கப்பட்டவர்கள், நேரடியாக போரில் ஈடுபட்டதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்தின் பேரால் பாதிக்கப்பட்டவர்கள், இராணுவ ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்வோர், பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் என எல்லோரும் உள்வாங்கப்பட்டு “வடக்கு மக்களுக்கான அபிவிருத்தி” என்ற ஒரு தொனிப்பொருள் ஏற்படுத்தப்படல் வேண்டும்.
7. வடக்கு மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டின் பிரதான அம்சமாக“வீடமைப்பு” “கல்வி”, “சுகாதாரம்”என்பன பிரகடனப்படுத்தப்படல்வேண்டும், இதற்கமைவாக இவை சார்ந்து அனைத்து நடவடிக்கைகளும ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.
8. மேற்படி விடயங்களை ஒழுங்கமைக்கின்ற விதத்தில் உட்கட்டமைப்புவசதிகள், போக்குவரத்து சேவைகள், வீதியமைப்பு, தொடர்பாடல்சேவைகள், நீர்விநியோகம், வடிகாலமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போன்ற விடயங்கள் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.
9. மாகாண மக்களின் அபிவிருத்தி இலக்குகளை அடைய உதவும்பொருட்டு மாகாண அரச ஊழியர் படை வினைத்திறன் கூடியதாக ஒழுங்கமைக்கப்படுதல் வேண்டும்.
10. அபிவிருத்தி விடயங்களைத் தீர்மானிக்கவும், மேற்பார்வை செய்வதற்கும்ஏதுவாக மாகாண அரசின் பிரதிநிதிகளையும், மத்திய அரசின்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய பொறிமுறை உருவாக்கப்படுதல் வேண்டும்.