Ad Widget

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஹெராத் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், சர்வதேச ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் விளையாடுவார். 38 வயதான ஹெராத் 71 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 74 விக்கெட்டுகளும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 17 ஆட்டங்களில் விளையாடி 18 விக்கெட்டுகளும், 67 டெஸ்டில் 297 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

ஹெராத் கூறுகையில்,

‘அடுத்த 8 மாதங்களில் நாங்கள் 12 டெஸ்டுகளில் விளையாட இருக்கிறோம். குறுகிய வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதன் மூலம் அடுத்த உலக கோப்பைக்குள் தங்களை மேம்படுத்திக் கொள்ள இளம் வீரர்களுக்கு வழிவிடுவதாக இருக்கும்.

அத்துடன் பணிச்சுமையை குறைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் முழு கவனம் செலுத்த முடியும். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை 2012–ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரைஇறுதியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதையும், 2014–ம் ஆண்டு உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான லீக்கில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதையும் மறக்க முடியாது.’ என்றார்.

Related Posts