ஒரு கோடி தர மறுப்பு: சிம்பு மீது லிங்குசாமி புகார்

தன்னிடம் வாங்கிய ஒரு கோடி ரூபாய் முன்பணத்தை சிம்பு திருப்பித் தர மறுக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் அளித்துள்ளார்.

simbu-lingusamy

இதுபற்றி கூறப்படுவதாவது:

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிம்பு ஹீரோவாக நடிக்க லிங்குசாமி ஒரு படத்தை இயக்கி, தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக சிம்புவுக்கு சம்பளம் பேசி ஒரு கோடி ரூபாய் முன்பணமும் கொடுத்தார். ஆனால் அதன்பிறகு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய லிங்குசாமியால் சிம்புவுடன் பணியாற்றும் படத்தை தொடங்க முடியவில்லை.

இதனால் தான் கொடுத்த ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கேட்டார் லிங்குசாமி. “ஒப்பந்தப்படி படம் எடுங்கள் நடிக்கிறேன். ஆனால் அட்வான்சை திருப்பித் தரமாட்டேன்” என்று கூறிவிட்டார் சிம்பு. அவரது தந்தை டி.ராஜேந்தர் மூலம் கேட்டுப் பார்த்தபோதும் “தவறு உங்கள் மேல் இருக்கிறது. நான் இதில் தலையிட மாட்டேன்” என்று கூறிவிட்டாராம். இந்த நிலையில் வேறு வழியில்லாமல் லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது.

Related Posts