விடுதலை புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவியான சிவகாமி ஜெயகுமாரன் (தமிழினி) எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்ற புத்தக பிரதிகளின் விற்பனை ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட இலாபத்தில் 3 இலட்சம் ரூபாய், மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்தை புத்தக வெளியீட்டு நிறுவனத்துடன் இணைந்து அவரது கணவர், வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளனர்.
மகரகம வைத்தியசாலையின் சிறுவர் பிரிவுக்கு மருந்துகள் கொள்வனவு செய்வதற்கு இந்த பணத்தை கொடுப்பதாக புத்தக வெளியீட்டாளரும் திரைப்பட இயக்குநருமான தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தன்னால் எழுதி முடிக்கப்பட்ட புத்தகங்களின் இலாபத்தில் ஒரு பகுதியை புற்றுநோய் வைத்தியசாலையில் சிக்ச்சைப்பெறும் சிறுவர்களுக்கு வழங்குமாறு மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றபோது தமிழினி கோரிக்கை விடுத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.