உடை மாற்றும் அறையில் நடப்பவற்றை நான் வெளியே சொல்ல மாட்டேன் என்று கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இது குறித்து கோஹ்லி கூறியதாவது,
கும்ப்ளேவின் முடிவை நான் மதிக்கிறேன். ஒரு விளையாட்டு வீரராக நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.
அனில் பாய் அவரின் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்தார் அதை நாங்கள் மதிக்கிறோம்.
இது டோர்னமென்ட் முடிந்த கையோடு நடந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின்போது 11 செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன்.
உடை மாற்றும் அறையயில் என்ன நடந்தாலும் அதன் கண்ணியத்தை காத்து வருகிறோம். ஒரு கிரிக்கெட் வீரராக அனில் கும்ப்ளே மீது மரியாதை வைத்துள்ளேன். அதில் மாற்றமே இல்லை. உடை மாற்றும் அறையில் நடப்பது பர்சனல் விஷயம். அதனால் அங்கு நடப்பவற்றை நான் வெளியில் சொல்ல மாட்டேன் என்றார்.