ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு – யாழ். மாவட்டத்தில் 26 066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 26 066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேர்முக பரீட்சைக்கு தோற்றுவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு
1. தேசிய அடையாளஅட்டை
2. பிறப்பு அத்தாட்சிபாத்திரம்
3.வதிவிடச்சான்றிதழ்
4.குடும்ப பங்கீட்டு அட்டை.
5.பாடசாலை விடுகைப்பத்திரம்
6.கல்வித் தகமை சான்றிதழ்கள்
7.பிரதேச, மாகாண, தேசிய மட்ட விளையாட்டு சான்றிதழ்கள்
8.ஏனைய கல்வித் தகமை சான்றிதழ்கள் .

இதற்கமைய யாழ் மாவட்டத்திலுள்ள 15 செயலாளர் பரிவுகளிலில் இருந்து நேர்முக பரீட்சைக்கு தெரிவுசெய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான நேர்முக பரீட்சைக்கான நேர அட்டவணை பின்வருமாறு:

No. Name of Divisio0nal Secretariat Number Time
01. Delft 448 9.00- 4.30
02. Kayts 784 9.30- 4.30
03. Velanai 863 9.00- 4.00
04. Jaffna 632 8.30- 4.30
05. Nallur 1967 9.00-4.00
06. Chankanai 2575 9.00-4.30
07. Sandilippay 2217 8.30- 4.30
08. Kopay 3394 8.30-5.00
09. Karainagar 628 9.00-4.30
10. Uduvil 2246 8.30- 4.30
11. Chavakachcheri 3331 8.30- 4.30
12. Tellipallai 1673 9.00-4.30
13. Karaveddy 1917 9.00-4.00
14. Point Pedro 2262 8.30- 3.30
15. Maruthankerney 1129 8.30- 4.30
Total 26066

Related Posts