ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானம்!

ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி பெற்ற துறைக்கு ஏற்ப அரச வேலைவாய்ப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு என்ற பெயரில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதற்கான திணைக்களம் இயங்கவுள்ளதாகவும் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

Related Posts