ஒருவர் பட்டதாரியாகி 6 மாதத்துக்குள் அரச துறையில் தொழில்- பிரதமர்

பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் ஒரு பட்டதாரி, பட்டம் பெற்று 6 மாத காலத்துக்குள் அரசாங்கத்தின் ஏதாவது ஒரு துறையில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வழி செய்ய வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (12) அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்படி, அரச துறைகளில் நிலவும் சகல தொழில் இடைவெளிகளையும் இனங்கண்டு, உடன் அமுலுக்கு வரும் வகையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts