ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை: மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு வலுவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசரின் மனு எதிர்வரும் 15ம் திகதி விசாரைணக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியுமா என உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றிடம் அரசியலமைப்பு விளக்கம் கோரியிருந்தது.

அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு விசாரணை செய்யும் தகுதி கிடையாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Posts