ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? கோகிலவாணி கேள்வி

ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? அவ்வாறு எனது பிள்ளையை பெறுமதி தீர்க்க இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது? என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி இராமநாதன் கோகிலவாணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”இன்று எங்களுடைய போராட்டம் 5 வருடங்களையும் கடந்து வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு லட்சம் ரூபா வாழ்வாதாரமும், மரணச்சான்றிதழும் மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களிற்கு காணாமல் போனோர் சான்றிதழ் வழங்குவதாகவும் நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.

எங்களது உறவுகள் கிடைக்கும்வரை போராடிவரும் எமது போராட்டத்தை மழுங்கடிக்கவே இந்த தீர்வை அவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்து உணவின்றி மக்கள் உயிரிழக்கும் வேளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு ஒரு லட்சம் ரூபா வாழ்வாதாரம் வழங்க முன்வந்திருக்கின்றார்.

இந்தவேளையில் அவர் இவ்வாறான வாழ்வாதாரத்தை கொடுக்க முன்வந்திருப்பது தொடர்பில் எமக்கு விளங்கவில்லை. எமது போராட்டத்தை மழுங்களிடிக்கவே இவ்வாறு உதவ முன்வந்துள்ளதாக நாங்கள் விளங்கிக்கொண்டிருக்கின்றோம். எமது உறவுகள் இவர்களது ஒரு லட்சம் ரூபாவை வாங்குவதற்கும், மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை.

இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டும். இவர்களால் தரமுடியாதுபுானால் சர்வதேசம் எமது உறவுகளை கண்டுபிடித்து தர வே்ணடும்.

எங்களுடைய உறவுகளைத்தேடி 5 வருடங்கள் முடிவடைந்துள்ள காலத்தில் இன்னும் புாராடிக்கொண்டுதான் இருக்கின்றோம். எங்களுடைய உறவுகளைத் தேடி மழை, வெயில், பனி என்று பாராது எத்தனையோ தாய்மார் இறந்தும் எமது போராட்டத்தை நாங்கள் கைவிடவில்லை.

இதுவரை காலமும் மது நோய்களிற்காக சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட பெறுமதிகூட இந்த ஒருலட்சத்தை ஈடு செய்யாது. இந்த நிலையில் இவர்கள் ஏன் இந்த ஒரு லட்சத்தை தர நிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. எங்களுக்கு எங்களுடைய உறவுகள்தான் வேண்டும். இவர்களிடம் பொருட்களை கொடுக்கவில்லை. இவர்களிடம் எமது பிள்ளைகளான உயிர்களையே ஒப்படைத்தோம்.

இப்பொழுது இருக்கின்ற அரசாங்கத்திடம்தான் எமது உறவுகளை ஒப்படைத்தோம். அவர்கள் இன்றுவரைக்கும் எவ்விதமான முடிவையும் தரவில்லை. எமக்கு எமது உறவுகளைத்தான் மீட்டுத்தரவேண்டுமேயன்றி இழப்பீடுகளோ, மரண்சான்றிதழ்களோ தேவையில்லை..

எமது உறவுகளை கையளித்து 12 ஆண்டுகள் முடிவடைகின்றது. 2009ம் ஆண்டு எமது பிள்ளைகளை ஓமந்தையிலு்ம, வட்டுவாகலிலும் அவர்களது கரங்களில் உயிருடன்தான் ஒப்படைத்தோம். 10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்து, அவரை படிப்பித்து எம்மை பார்க்க வே்ணடும் என்ற இந்த நேரத்தில் இன்று பிள்ளையை இழந்து நிக்கின்றேன்.

ஒருலட்சம்தானா எனது பிள்ளையின் பெறுமதி? அவ்வாறு எனது பிள்ளையை பெறுமதி தீர்க்க இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Posts