ஒருநாள் தொடர் இலங்கை வசம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

CRICKET-SRI-WIS-ODI

நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இந்தநிலையில் அந்த அணி 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 149 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது.

மீளவும் போட்டி ஆரம்பிக்கப்பட்டதும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் 38 ஓவர்களாக குறைக்கப்பட்டன.

இதனையடுத்து 37.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த அந்த அணி 214 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி இலங்கைக்கு டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குஷல் பெரேரா 99 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும் லகிரு திருமானே ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களை விளாச இலங்கை அணி 36.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இலந்து 225 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் முன்று போட்டிகள் கொண்ட தொடர் 2-0 என இலங்கை வசமாகியுள்ளது.

Related Posts