ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்தியா அணிக்கெதிரான 5 ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டுத்தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இந்தியா அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை படு மோசமாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், பல மாற்றங்களுடன் இலங்கை அணி ஒருநாள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டுத்தொடருக்கு முகம் கொடுக்கவுள்ளது.

டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக விலகிய அசோலா குணரத்னவுக்கு பதிலாக சகலதுறை வீரர் திஸர பெரேரா மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை டெஸ்ட் போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர்களான மலிந்த புஷ்பகுமார,விஷ்வ பெர்னாண்டோ ஆகியோரும் இலங்கை குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருப்பது போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை மிகவும் தகுதியான நிலையில் இருப்பதாகவும் அணிக்கான பூரண ஆதரவை வழங்குமாறும் இலங்கை அணி ரசிகர்களை வேண்டிக்கொள்வதாக அணித்தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி விபரம்;
உபுல் தரங்க (தலைவர்), அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷான் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக, குஸல் மெண்டிஸ், சாமர கபுகெதர, மிலிந்த சிறிவர்தன, மலிந்த புஷ்பகுமார, அகில தனஞ்ஜய, லக்ஷன் சந்தகன், திசார பெரேரா, வணிந்து ஹஸரங்க, லஸித் மாலிங்க, துஷ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ.

Related Posts