Ad Widget

ஒருநாள் கூத்துக்காக பழமையான கோட்டையை உடைத்த இராணுவத்தினர்!

கலாசார நிகழ்வு ஒன்றுக்காக தொன்மை மிக்க பூநகரி கோட்டையின் சில பகுதிகளை இராணுவத்தினர் நேற்று உடைத்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்பாட்டு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த பூநகரி-வாடியடிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கோட்டையின் சில பகுதிகளே இராணுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளது.

பழமை மிக்க செங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள மரபுரிமை சின்னமாக விளங்கக் கூடிய இந்தக் கோட்டையை பாதுகாக்க வேண்டிய நிலையில் அது இராணுவத்தினரால் தங்களுடைய ஒரு நாள் நிகழ்வுக்காக உடைத்து சேதப்படுத்தியமை அதிர்ச்சியளிக்கும் விடயமாக உள்ளது.

Related Posts