ஒருநாளான சிசு மரணம்!- விசாரணை செய்யக்கோரி பெற்ற தாய் கதறல்

baby-jaffnaயாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருநாளான சிசு திடீரென மரணமாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேமகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தைப் பேற்று விடுதியில் நேற்று முன்தினம் இரவு 8.35 மணிக்கு பிறந்த சிசு மறுநாள் காலை 9.30 மணிக்கு மரணமாகியுள்ளது.

உரும்பிராய் தெற்கு, உரும்பிராயைச் சேந்த இளம் தாய்க்கு பிறந்த முதல் குழந்தையே இவ்வாறு மரணமாகியுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிசு மரணம் தொடர்பில் குழந்தையைப் பெற்ற தாய் சந்தேகிப்பதாகவும் இது தொடர்பான விசாரணை தேவை என தாயார், தன்னிடம் கோரியுள்ளதாக அவர் கூறினார்.

இதனால் இந்த சிசுவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மருத்துவப் பரிசோதணைக்கு சிசுவை உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் தாம் கோரியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நவசிவாயம் பிரேமகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts