ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் விக்கி – டக்ளஸ் இணைத் தலைமையில்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.

Daklas -vicky

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதன்முறையாக நடத்தப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர் கடந்த வருடம் நவம்பர் மாதம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் இணைத் தலைமை தாங்கவேண்டியிருந்த போதும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலேயே கூட்டம் நடைபெற்றது.

அதனால் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. இந்த நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு, யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைத்தலைமை தாங்கவுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு யாழ்.மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைத் தலைமை தாங்கியிருந்ததனர். அதன் பின்னர் இருதரப்பு இணைத் தலைமையில் 6 ஆண்டுகளின் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts