ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் டக்ளசின் ஆள்கள் தாக்கியதில் விவசாய அமைச்சருக்கு காயம்

யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.3௦ மணியளவில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பெரும் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

ainkaranesan

வடமாகாணசபை ஆளுங்கட்சியினருக்கும் , எதிர்கட்சியினருக்கும் இடையே இடம்பெற்ற கருத்து மோதலையடுத்து தண்ணீர் போத்தல்களால் இருதரப்பினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு இரத்தக்காயம் ஏற்பட்டதை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த கூட்டம் திகதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts