ஒன்வொன்றாக வெளியாகும் கிறிஸ் கெய்லின் லீலைகள் : ஆஸ்திரேலிய பெண்ணிடமும் சேட்டை

ஆஸ்திரேலிய பெண்ணிடம் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து ஆணுறுப்பை காட்டியதாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் மீது புகார் எழுந்துள்ளது.

gayle

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடரில் ஆடிவரும் கிறிஸ் கெயில், டிவி வர்ணனையாளரிடம் மது குடிக்க வருமாரு அழைப்புவிடுத்து சர்ச்சையில் சிக்கி அபாரதத்திற்கு உள்ளானார்.

இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், கெயில் பற்றி புதிதாக ஒரு விவகாரம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இதுவும் கூட பெண்ணுடன் சம்மந்தப்பட்ட விவகாரம்தான் என்பதால் கெயில் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது, கெயில் உள்ளிட்ட மே.இ.தீவுகள் வீரர்களுக்கு உதவி செய்ய ஆஸ்திரேலிய பெண்மணி ஒருவரும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.சம்பவத்தன்று, மே.இ.தீவுகள் வீரர்களின் உடைமாற்றும் அறைக்கு அந்த பெண்மணி, சேன்ட்விஜ் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். நாள் முழுவதும் சாப்பிடாமல் பணியில் கவனம் செலுத்தியதால் பசியோடு சென்ற பெண்மணி, சேன்ட்விஜ்ஜை தேடியுள்ளார்.

அப்போது அங்கு கிறிஸ் கெயில் இடுப்பில் துண்டு மட்டும் கட்டிய நிலையில் அங்கு நின்றுள்ளார். பசியோடு சேன்ட்விஜ் தேடிய அந்த பெண்ணை பார்த்து, “இதைத்தான் தேடுகிறாயா” என கேட்டபடி, தனது துண்டை அவிழ்த்து, ஆணுறுப்பை காண்பித்துள்ளார்.

அப்போதே, இந்த தகவல், அணி மேலாளர் ரிச்சே ரிச்சர்ட்சனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கெயில் பெயரை வெளியில் விடாமல் மேலாளர் தவிர்த்துவிட்டார். அதேநேரம், அனைத்து மே.இ.தீவுகள் வீரர்களுக்கும் அவர் இ-மெயில் ஒன்றை அனுப்பி, பெண் ஊழியர்களிடம் மரியாதையோடு நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், டிவி தொகுப்பாளியிடம், கெயில் நடந்த விதத்தை பார்த்து கோபப்பட்ட அந்த பெண்மணி, தற்போது மீடியா ஒன்றை அணுகி தனது பழைய கசப்புகளை தெரிவித்துள்ளார். இதுபோன்ற செய்கைகள் கொண்ட ஒருவர் ஹீரோவாக பார்க்கப்படுவது அவமானகரமானது என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை தண்ணி அடிக்க அழைத்த கெயில்!

வீட்டுக்குள்ளேயே நிர்வாண போல் நடன கிளப் நடத்தும் கிறிஸ் கெய்ல்

Related Posts