ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் பரீட்சை பெறுபேறுகள் !

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

அதன்படி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை நாளை மறுதினம் ஆரம்பிப்போம் என்றும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதேநேரம் உயர்தரப் பரீட்சையை ஜனவரி 23ஆம் திகதி நடத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மே மாதம் நடைபெறவுள்ள பொதுப் பரீட்சைக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts