ஒன்ராரியோ முதலமைச்சர் கத்தலின் வினிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு ஒன்ராறியோ முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பொருளாதார அபிவிருத்தி மற்றும் பெண்களின் வலுவூட்டல், நிறுவன நல்லாட்சி மற்றும் பொதுசனசேவை, நிறுவனங்களின் துறைசார் விருத்திகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.