ஒசாமா பின்லேடனை கொல்லும் திட்டத்தை பாகிஸ்தானிடம் கூறாதது பற்றி ஹிலாரி கிளிண்டன் தகவல்

அல்கொய்தா தீவிரவாதிகளின் முக்கிய தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்கா திட்டமிட்டதை பாகிஸ்தானிடம் முன்கூட்டியே கூறாததற்கான காரணம் பற்றி ஹிலாரி கிளிண்டன் தற்போது தெரிவித்துள்ளார்.

kilarey-kilindon

அல்கொய்தா தீவிரவாதிகளின் தாக்குதல்களை, மூளையாக இருந்து நடத்தியவர் பின்லேடன். அவர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள அபோத்தாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த போது, அமெரிக்கா கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி அதிரடி தாக்குதலின் மூலம் அவரை கொன்றது.

இந்த தாக்குதலை நடத்தப்போவது குறித்து பாகிஸ்தானிடம் அமெரிக்கா முன்னதாக தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து அப்போதைய ஹிலாரி கிளிண்டன், தற்போது எழுதி வெளியிட்டுள்ள “ஹார்டு சாய்சஸ்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதில் கூறியிருப்பதாவது, “பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை சுற்றி வளைக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்புவது குறித்து அதிபர் ஒபாமா, பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ், நான் உள்பட உயர் அதிகாரிகள் சிறப்பு ஆலோசனை நடத்தினோம்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ யில் உள்ள சிலர், அல்கொய்தா தீவிரவாதிகளுடனும், தாலிபான் தீவிரவாதிகளுடனும் நெருங்கிய தொடர் கொண்டிருந்தது எங்களுக்குத் தெரியும்.

இது போன்ற தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே கசிந்ததால் பலமுறை நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனவேதான் இது குறித்து முன் கூட்டியே பாகிஸ்தானிடம் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts