இலங்கை மற்றும் தென் இந்தியாவில் பயன்படுத்தும் ஒரு சொல்லான ‘ஐயோ’ (Aiyo) எனும் சொல் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அகராதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய தொகுப்பில் இந்த சொல் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தென் இந்திய மற்றும் இலங்கையில் துன்பம் மற்றும் வருத்தத்தை தெரிவிப்பதற்கு இந்த சொல் பயன்படுத்தப்படுவதாக அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.