ஐ படத்தில் அனிருத்தை பாட வைத்த ரஹ்மான்

தனது முந்தைய தமிழ்ப் படம் மரியானில் யுவன் ஷங்கர் ராஜாவை பாட வைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஐ படத்தில் அனிருத்தை பாட வைத்துள்ளார்.

Arr-shankar-aniruth

படங்களில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் பாடுவது அதிகரித்து வருகிறது. நடிகரோ இசையமைப்பாளரோ பாடும் போது அது மீடியாக்களில் செய்தியாகிவிடுகிறது. படத்துக்கும் இலவச விளம்பரம் கிடைக்கிறது. இதன் காரணமாகவே சில இசையமைப்பாளர்கள் தொடர்ச்சியாக தங்கள் படங்களில் நடிகர், நடிகைகளுக்கு பாடுவதற்கு வாய்ப்பு அளித்து வருகின்றனர்.

ரஹ்மான் அப்படியில்லை. மரியான் படத்தில் யுவன் ஷங்கரை பாட வைத்தாலும் யுவன் ஏற்கனவே பாடியிருக்கும் பாடல்களிலிருந்து அவரது மரியான் பாடல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. பாடலின் தன்மைக்கு குறிப்பிட்ட ஒருவரின் குரல் சிறப்பாக இருக்கும் என்று தோன்றினால் மட்டுமே பிரபலங்களை பாட வைப்பார் ரஹ்மான்.

தற்போது இசையமைத்துவரும் ஷங்கரின் ஐ படத்தில் அனிருத்தை ஒரு பாடல் பாட வைத்துள்ளார். இந்தத் தகவலை ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மரியானைப் போலவே வித்தியாசமான குரலுக்காகவே அனிருத்தை ரஹ்மான் பாட வைத்திருப்பதாக ஐ யூனிட் கூறுகிறது.

Related Posts