ஐ படத்தின் மேக்கப் மேனையே எந்திரன்-2 படத்துக்கும் ஒப்பந்தம் செய்த ஷங்கர்

ரஜினியின் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் ‘எந்திரன்’. இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். பிரம்மாண்டமாக வெளிவந்த இப்படம், வசூலிலும் பிரம்மாண்டம் படைத்தது.

enthiran2015

இதுவரை எந்த படங்களும் செய்யாத வசூல் சாதனை படைத்த, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிர ஆர்வம் காட்டினார். இரண்டாம் பாகத்தில் நடிக்க ரஜினியும் பச்சைக் கொடி காட்டினார்.

இதையடுத்து, எந்திரன் 2-ம் பாகத்தை எடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினி, அர்னால்டு, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு மேக்கப் போடுவதற்கு ஏற்கெனவே ஷங்கரின் ‘ஐ’ படத்தில் பணியாற்றிய வோட்டா நிறுவனத்தின் ஷான் பூட், ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஷான்பூட் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்திற்கும் மேக்கப் போட ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எந்திரன் -2’ படத்திற்காக வருகிற டிசம்பர் மாதம் ரஜினிக்கு மேக்கப் டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும், அதேநேரத்தில் ரஜினியின் டூப்புக்கும் மேக்கப் டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் அனேகமாக டிசம்பரில் முடிவடைந்துவிடும் என தெரிகிறது. எனவே, டிசம்பர் மாத இறுதியில் ‘எந்திரன்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts