ஐ. நா விசேட பிரதிநிதி தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகளை யாழ். நகரில் சந்தித்தார்.

இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கான ஐ நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட பிரதிநிதி மொனிக்கா பின்ரோ ( ) தலமையிலான தூதுக்குழுவினருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டுக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் சிற்றம்பலம், திரு. ஜனார்த்தனன் மற்றும் பேரவை உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவருமான கலாநிதி திருக்குமரன் அடங்கிய குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (05.05.2016) அன்று யாழ் நகரில் இடம்பெற்றது.

tpc

இதன் போது போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை காலதாமதமின்றி இடம்பெற ஐ. நா மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கும் , சர்வதேச சமூகத்துக்குமுள்ள கடப்பாட்டினை பேரவை பிரதிநிதிகள் எடுத்துக்கூறினர்.

மேலும், அண்மைக்காலமாக தமிழர் பிரதேசங்களில் கட்டுப்படுத்தமுடியாதவாறு அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, குழு வன்முறைகள், கொள்ளை, பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்திய பேரவை பிரதிநிதிகள், தமிழ் இனத்தின் அடையாளமான கல்வி, கலாச்சாரம், வாழ்வியல் என்பவற்றை சிதைக்கும் ஒரு தொடர்ச்சியான செயற்பாட்டின் அங்கமாகவே இவற்றை நோக்க வேண்டியுள்ளது என்பதை எடுத்துரைத்து, தமிழர் பிரதேசங்களில் சட்டம், ஒழுங்கை செம்மையாக நிலை நிறுத்தக் கூடியவாறு ஆட்சியதிகாரம் தமிழர்களிடம் வழங்கப்படக்கூடிய அரசியல் தீர்வு வரும்பட்சத்தில் மட்டுமே இவற்றிற்கான ஒரு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் என்பதை வலியுறுத்தினர்.

Related Posts