ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய ஆணையர் பதவிக்கு ஜோர்தான் நாட்டுக்கான தூதுவர் இளவரசர் செய்த் ராத் அல் ஹுசைனை தான் முன்மொழிவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
அல் ஹுசைஅன் (வயது 50), ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டுள்ளார்.
பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி பட்டம் பெற்றார். தற்போது அவர் ஜோர்தான் நாட்டுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதராக பணியாற்றுகின்றார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, அல் ஹுசைன் புதிய ஆணையாளராக பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.