ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு சம்பந்தன் அவசர கடிதம்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறவுள்ளது.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவும் வகையில் இருக்காது என்பது தெளிவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்புவதற்கான கடிதம் ஒன்றை வரைந்துள்ளார்.

ஜெனிவா சென்றுள்ள கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் ஊடாகவே இந்தக் கடிதத்தை அவர் அனுப்பிவைத்துள்ளார். சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் ஆதரவைப் பெறுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts