ஐ.நா. பொதுச்சபையில் மஹிந்தவை உரையாற்ற அனுமதிக்கவேகூடாது! ரெசோ அமைப்பு தீர்மானம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஐ.நா. சபை பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்ற அனுமதிக்ககூடாது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியாவில் விசாரணை நடத்த அனுமதி வழங்குவதுடன் ஐ.நா.விசாரணை குழுவுக்கு விசா வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தமிழீழ ஆதரவு அமைப்பு (ரொசோ).

teso

ரொசோ அமைப்பின் அவசர கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவை வருமாறு:-

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் 25ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை உரையாற்ற ஐ.நா. சபை அனுமதிக்கக்கூடாது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் குறித்து இந்தியாவில் விசாரணை நடத்தவேண்டும். அதற்காக ஐ.நா. சபை நியமித்துள்ள விசாரணைக்குழுவுக்கு இந்தியா வர மத்திய அரசு விசா வழங்கவேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழக மீனவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்படி நான்கு தீர்மானங்களே இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related Posts