ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளச் செல்லும் போது, கூட்டத்தொடரிலும் அங்கத்துவ நாடுகளிடமும் கையளிப்பதற்காக, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளை வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிடம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட, ‘இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது’ மற்றும் ‘இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும்’ ஆகிய இரண்டு பிரேரணைகளையும் முதலமைச்சர் கையெழுத்திட்டு உறுதிப்படுத்தி வழங்கியுள்ளார்.
இந்தப் பிரேரணைகளின் பிரதிகளை இம்மாதம் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரில் வைத்து, உறுப்பு நாடுகளிடம் வழங்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறினார்.
கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா செல்வதற்கான அனுமதியை, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார, நேற்று புதன்கிழமை (09) வழங்கியுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.