ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றவை ‘இனப்படுகொலை’ எனக் குறிப்பிடாமல் ‘அமைதி’ காத்தமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விடயம் குறித்து இந்தியாவின் ‘தி இந்து’ நாளிதழ் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலிடம் கேள்வி எழுப்பியது. அந்தக் கேள்விக்கு ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா சம்தாசினி அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு:
இலங்கையில் இடம்பெற்றவை இனப்படுகொலை இல்லை என்று நாம் கூறவில்லை. இதன் முடிவை நடைபெறவுள்ள குற்றப் புலனாய்வு விசாரணைகள் மற்றும் எமது பரிந்துரைகளான நீதிமன்ற விசாரணைகளின் மூலமே கண்டறியப்பட வேண்டும்.
இனப்படுகொலை என்பதை சில வரையறைகளுக்கு உட்பட்டே கூறமுடியும். ஆனால் இடம்பெற்றது இனப்படுகொலையா என்பதை எமக்குக் கிடைத்த – நாம் சேகரித்த தகவல்களை இனப்படுகொலை எனக் கூறமுடியாது.
இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றவை இனப்படுகொலையே என வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியதையும் சுட்டிக்காட்டினார்.