ஐ.தே.க வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்

UNP-karainagarஐக்கிய தேசிய கட்சியின் வட மாகாண சபை தேர்தல் வேட்பாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனின் காரைநகர் அலுவலகம் மீது இரண்டாவது தடவையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தின் மீது நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் கழிவொயில் வீசப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரினால் கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி இந்த அலுவலம் திறந்துவைக்கப்பட்டது.எனினும் அன்றைய தினம் இரவு இனந்தெரியாதோரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் நேற்று சனிக்கிழமை இரவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பீடம், உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என வேட்பாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Posts