ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையிலேயே கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க 72 வாக்குகள் பெற்று மீண்டும் தெரிவாகியுள்ளார்.தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கரு ஜயசூரிய 24 வாக்குகள் மட்டுமே பெற்றார்
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக சஜித் பிரேமதாஸ 52 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பிரதித் தலைவர் பதவிக்கான போட்டியில் ரவி கருணாநாயக்கா 44 வாக்குகள் பெற்றிருந்தார்.கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கான போட்டியில் தயாசிறி ஜயசேகர மற்றும் தயா கமகே ஆகியோர் போட்டியிட்ட நிலையில் தயா கமகேவுக்கு 56 வாக்குகளும் தயாசிறி ஜயசேகரவுக்கு 36 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.