ஐ.சி.சி. விருது 2014 : ஆண்டின் சிறந்த வீரராக ஜோன்சன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இல்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.

mitch-johnson

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜோன்சன், ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய இரு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார்.

இதில் முக்கிய விருதுகள் எதையும் இலங்கை அணி வீரர்களில் ஒருவர் கூட பெறவில்லை.

இந்த ஆண்டிற்கான மக்கள் விருப்ப விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

ஐ.சி.சி. ஒருநாள் அணியில் இலங்கை வீரர்கள் சார்பாக அஜந்த மெண்டிஸின் பெயர் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஒருநாள் அணித்தலைவராக இந்திய அணித் தலைவர் டோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு :

ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் போட்டி வீரர் – டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் போட்டி வீரர் – மிட்சல் ஜோன்சன் (அவுஸ்திரேலியா)

ஐ.சி.சி. மக்கள் விருப்பம் – புவனேஸ்வர் குமார் (இந்தியா)

ஐ.சி.சி. இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் – மிட்சல் ஜோன்சன் (அவுஸ்திரேலியா)

ஐ.சி.சி. இந்த ஆண்டிற்கான ஒருநாள் அணி விபரம் வருமாறு :

ஹபீஸ், டி கொக், விராட் கோலி, ஜோர்ஜ் பெய்லி, டி வில்லியர்ஸ், மகேந்திர சிங் டோனி (அணித் தலைவர்), டுவைன் பிராவோ, ஃபால்க்னர், டேல் ஸ்டெய்ன், முஹமட் ஷமி, மெண்டிஸ், ரோஹித் சர்மா.

Related Posts