ஐ.ஓ.சி.யும் எரிபொருள் விலையை குறைத்தது!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.

அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 07 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Posts