ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!!

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்னிந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுருவி உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் அமைப்பினர், பல்வேறு உலக நாடுகளில் தொடர்ந்து தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இந்த இயக்கத்துக்காக உலக நாடுகளில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளும் நடந்து வருகிறது. இந்த அமைப்பில் சேர்வதற்காக இந்தியாவில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் சென்றுள்ளனர். மேலும் பலர் இங்கேயே இருந்து கொண்டு அந்த அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட உளவுத்துறை தகவல்படி, இந்தியாவில் 150 இளைஞர்கள் ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவாளர்களாக செயல்படுவதாக கண்டறியப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டு இருந்தது. எனவே அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தொடங்கினர்.

கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தின் பெயரில் கைது நடவடிக்கை நடைபெற்றது.

Related Posts