ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி –ஹன்சிகா

விஜய் சேதுபதி– நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தயாரித்தவர் தனுஷ், இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

viay-sethupathy-hansika

மீண்டும் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தையும் விக்னேஷ் சிவன்தான் இயக்குகிறார். இந்த படத்தில் திரிஷாவும் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், விஜய் சேதுபதி– ஹன்சிகா ஜோடி சேரும் படத்தை தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம், நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பிரேம் படத்தின் கதை. இந்த படத்தில் 3 நாயகிகள் இதில் ஒருவராக ஹன்சிகா தேர்வாகி இருக்கிறார். மற்ற நாயகிகள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளன. இப்போது விஜய்சேதுபதி– ஹன்சிகா ஜோடி சேரும் புதிய படத்தை தயாரிப்பதால், இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts