ஐஸ்வர்யா இயக்கத்தில் மீண்டும் தனுஷ்

மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கிறார்.ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் தனுஷ் நடித்தார். இப்படம் 2012–ல் ரிலீசானது. இதில் இடம் பெற்ற ‘ஒய்திஸ் கொலை வெறி’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. அதன் பிறகு ஐஸ்வர்யா படங்கள் இயக்காமல் இருந்தார்.

dhanush-thanush-danush

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ‘வை ராஜா வை’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். கவுதம் கார்த்திக் நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கின்றனர். விவேக் காமெடி வேடத்தில் வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

இப்படத்தில் திருப்புமுனையான முக்கிய கேரக்டர் ஒன்று உள்ளது. அந்த கேரக்டரில் நடிக்கும்படி தனுசிடம் ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டார். தனுசும் நடிக்க சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளது.

Related Posts