ஐரோப்பா எல்லையில் கோப்பாய் இளைஞரின் சடலம் மீட்பு!!

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்ச்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

சிறு வயது முதல் தந்தையை இழந்த இளைஞர் உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பா நாட்டுக்கு செல்ல முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார் .

இந்நிலையில் நேற்றைய தினம் எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா ரசியா எல்லையை கடக்க முயற்ச்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

இது கொலையா? இயற்கை மரணமா? என்ற சந்தேகம் தொடர்ந்த வண்ணம் உள்ளது, சம்பவத்தில் யாழ்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த S.ஜதுசன் வயது 25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர உறவினர்கள் முறச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts