“ஐபேட் கொடுத்துவிட்டு 2 கிலோ எடையை எடுத்து விட்டார்களே”,இங்கிலாந்து வீரர்கள் புலம்பல்

எதிரி நாட்டு வீரர்களின் சாதக பாதகங்களை அறிந்துகொள்வதற்காக இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி வீரர்களுக்கு இலவசமாக ஐபேட் அளிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் இம்மாதம் 12ம்தேதி துவங்க உள்ள பிபா உலககோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து அணி நிர்வாகம் முழு வீச்சில் செய்து வருகிறது.

ipad

அணி வீரர்கள் அனைவருக்கும் இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்கம் தலா ஒரு ஐபேட் வழங்கியுள்ளது. இந்த ஐபேட் கருவியில் பிற அணி வீரர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அணி வீரரின் பெயரை கிளிக் செய்தால், அவர் சிறப்பாக ஆடிய ஆட்டத்தின் வீடியோ தொகுப்பு உள்ளிட்ட பல விவரங்களை பார்த்து அறிந்துகொள்ளலாம்.

பிரேசில்-2014 என்ற ஸ்கவுட்டிங் என்ற அப்ளிகேசனை தரவிரக்கம் செய்து கொண்ட்டு ஐபேடிலேயே அனைத்தையும் அலசிக்கொண்டுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள். இந்த அப்ளிகேசனை ஆன்டி ஸ்கவுல்டிங் என்ற அமைப்பு தயாரித்துள்ளது.

பிரேசில் நாட்டு தட்பவெப்பம், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் இந்த அப்ளிகேஷனில் விவரமுள்ளது. இங்கிலாந்தைவிடவும் பிரேசில் வெப்பம் நிறைந்த பகுதி என்பதால் அதை எதிர்கொள்ள மனதளவில் பல தயார்படுத்தல்களை இந்த அப்ளிகேஷன்கள் அளிக்கின்றன.

மான்செஸ்டர் சிட்டி அணி வீரர் ஜேம்ஸ் மில்னர் கூறுகையில், ஐரோப்பாவைவிட பிரேசிலில் வெப்பம் சற்று அதிகமாகத்தான் உள்ளது. இதற்கான பயிற்சிகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். வெறுமனே விளையாட்டு தொடர்பான பயிற்சிகள் மட்டுமின்றி, அனைத்து வகையிலும் இங்கிலாந்து அணி தயாராகிவருகிறது. எங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது.

பிரேசிலின் வெப்ப நிலையை சமாளிக்க அமெரிக்காவின் மியாமி கடற்கரை நகரில் இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் வியர்வையுடன் விளையாடும் அனுபவத்தை பெற்று வருகிறோம். பைக்கில் வெப்பத்துக்கு நடுவே சவாரி செய்து உடலின் தாங்கு சக்தியை அதிகரித்து வருகிறோம் என்றார்.

வெப்பத்தில் வீரர்களை வைத்து வாட்டி எடுப்பதால் அதிகப்படியான வியர்வை வெளியேறுகிறது. இது வீரர்களுக்கு வீரர் மாறுபடும். வீரர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதுடன் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். வெப்பத்தால் உடலில் இருந்து ஏதேனும் தாதுக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து அதற்கேற்ப எனர்ஜி பானங்களை கொடுத்து வருகிறார்கள். வெப்ப பயிற்சியின்போது இங்கிலாந்து வீரர்கள் 2 கிலோ அளவுக்கு உடல் எடையை இழந்துள்ளனர்.

Related Posts