ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டு புள்ளிகள் வெளியாகின!

கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்க ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது,results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்ட ரீதியாகவும் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில்,

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் கேகாலை – 153 வெட்டுப்புள்ளிகளாகவும்

ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி – 150 வெட்டுப்புள்ளிகளாகவும்

அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, அம்பாறை, புத்தளம் – 148 வெட்டுப்புள்ளிகளாகவும்

நுவரெலியா, திருகோணமலை – 147 வெட்டுப்புள்ளிகளாகவும்

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு – 145 வெட்டுப்புள்ளிகளாகவும்

யாழ்ப்பாணம் – 143 வெட்டுப்புள்ளிகளாகவும்

கேகாலை 144ம் வெட்டுப்புள்ளிகளாகவும் வெளியாகியுள்ளது.

இதேவேளை 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இத்தேர்வுக்கு மூன்று லட்சத்து 34,698 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts