ஐசிஸ் தீவிரவாதிகளால் பலர் படுகொலை

ஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐசிஸ், திக்ரித் நகரில் 160 முதல் 190 இராக்கிய இராணுவ வீரர்களை கொன்றிருக்கக் கூடும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

isis_irak

திக்ரித் நகரை, இந்த மாதத்தின் முற்பகுதியில் தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகே இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
செயற்கை கோள் வழியாக எடுகப்பட்ட படங்கள் மற்றும் புகைப்படங்களின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே, ஐசிஸால், இவ்வளவு பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் கணக்கிட்டுள்ளதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

இரண்டு நீண்ட குழிகளில், உடல்கள் நிறைந்திருந்ததை செயற்கைகோள் படங்களும், இதர ஆவணங்களும் காட்டுகின்றன என்று அந்த மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

தங்களது சந்தேகங்களை உறுதி செய்துகொள்வதறக தங்களால் திக்ரித் நகருக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது என்றாலும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.

ஐசிஸ் அமைப்பு, ஒரே நேரத்தில் பலரை படுகொலை செய்த காணொளிக் காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Related Posts