‘ஐக்ளவுட்’ கணக்குகளுக்குள் ஊடுருவிய கும்பல்! பிரபலங்களின் அந்தரங்க படங்கள் இணையத்தில்!

குறுகிய காலத்தில் புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்ற பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் புகைப்படங்கள் நேற்றிரவு இணையத்தின் மூலமாக கசிந்தது.

icloud1

சினிமா மற்றும் இசையுலகைச் சேர்ந்த சில பிரபலங்கள் தங்களைத் தாங்களே கைபேசிகளின் மூலமாக நிர்வாணக் கோலத்தில் படம்பிடித்து, அவற்றை ‘ஐக்ளவ்ட்’ தொழில் நுட்பத்தின் மூலமாக தங்களது மனதுக்கு பிடித்தமான நபர்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

இதைப் போன்று பகிரப்படும் 101 பிரபலங்களின் புகைப்படங்களை அவர்களது ‘ஐக்ளவுட்’ கணக்குகளுக்குள் ஊடுருவிய ஒரு கும்பல் பெரும் விலைக்கு விற்று இலாபம் பார்த்து வருகின்றது.

இவ்வகையில், ஹாலிவுட்டின் இளம் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், தொலைக்காட்சி தொகுப்பாளினி கிம் கர்டஷியன், நடிகை வனேஸ்ஸா ஹட்கென்ஸ், நகைச்சுவை நடிகை ஆப்ரே பிளாஸா ஆகியோரின் நிர்வாண புகைப்படங்கள் கடந்த வாரம் இணையதளங்களில் உலா வந்து பலரது தூக்கத்தை கெடுத்து, ஏக்கத்தை கொடுத்தது.

இந்தப் பட்டியலின் புதிய வரவாக பிரபல பாடகி ரிஹான்னாவின் நிர்வாணப் படங்கள் நேற்றிரவு வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் பிரபல மாடல் அழகி ஒருவரின் நிர்வாணப் படங்களும் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பரம இரகசியமாக தனது மனதுக்கு பிடித்த ஒருவருக்கு மட்டும் அனுப்பப்படும் இவ்வகையிலான புகைப்படங்கள் இணையதளங்களுக்கு கசிவது எப்படி? என்பது தொடர்பான கேள்விக்கு, இதுவரை ‘ஐக்ளவ்ட்’ சேவையை வழங்கிவரும் ‘ஆப்பிள்’ நிறுவனத்தால் விடை காண முடியவில்லையே என்ற கோபம் தற்போது உலகின் பல பிரபலங்களை ஆட்டிப்படைத்து வருவதாக வலைத்தள வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Related Posts